FIFA மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நோர்வே மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
நேற்றைய தினம் நியூசிலாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகிய பீபா மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குழு ஏ யில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து மகளிர் அணி நோர்வே மகளிர் அணியை எதிர்கொண்டது. குறித்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல்கள் எதுவும் அடிக்க முடியாமல் போனது.
அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி வீராங்கனையான ஹன்னா வில்கின்சன் (Hannah Wilkinson) இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் முதலாவது கோலை பதிவு செய்தார்.
அதற்கமைய போட்டியின் இரண்டாவது பாதியில் நியூசிலாந்து மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் நோர்வே மகளிர் அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. அதற்கமைய நியூசிலாந்து மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நோர்வே மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
முதல் முறையாக இருநாடுகள் இணைந்து நடத்தும் FIFA மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் நேற்றைய தினம் ஆரம்பமாகியது. குறித்த தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைத்து நடத்துகின்றன.