பிரான்சில் தமிழின அழிப்பின் 40வது வருடம்; உலகில் எழுப்பப்பட்ட முதல் நினைவுக்கல்!

0
288

உலகின் முதலாவது கறுப்பு ஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. பாரிசின் புற நகரான பொண்டி நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழின அழிப்பான “கறுப்பு யூலை” 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் நடும் நிகழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

தமிழினவழிப்பின் 40வது வருடம்; பிரான்சில் கறுப்புஜூலை நினைவுக்கல் | 40Th Year Of Tamils Black July Memorial In France

உலகப் பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்கிழமை (18) மாலை 6.30 மணிக்கு நகரசபை முதல்வர்கள் மற்றும் உதவி நகரசபை முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மரத்தினை நாட்டினார்கள்.

மரம் நாட்டியதைத் தொடர்ந்து பொண்டி நகரசபை முதல்வரால் கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவுக்கல் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டது