மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல்! விமல் வீரவன்ச தகவல்

0
211

எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் மறுசீரமைக்கப்பட்ட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் காணப்படும் குறைபாடுகள்

தற்பொழுது கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி தொகைகளை செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நரகத்தில் இடைவேளை வழங்குவது போன்று சிறிய சிறிய நிவாரணங்களை ரணில் வழங்குகின்றார். மின்சார கட்டணம் 60 முதல் 20 வீதம் வரையில் உயர்த்தி அதனை 14 வீதத்தினால் குறைப்பதற்கு முயற்சிக்கின்றார்.

இந்த நிவாரணங்களை கண்டு யாரும் ஏமாந்து விடக்கூடாது.  அதுவரையில் கடன் செலுத்துகைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

ரணிலின் மாயாஜாலத்திற்கு ஏமாந்து விடாது பொருளாதாரத்தில் காணப்படும் குறைபாடுகளையே அவதானிக்க வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.