பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்ட இரு வெளிநாட்டு பெண்களுக்கு அவர்களது 25,000 ரூபாய் பணத்தை மீள செலுத்த தவறிய இலங்கையர்கள் தொடர்பிலான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
திருகோணமலை, நிலாவெளி கடலில் உள்ள தீவுக்கு படகு சவாரி செல்லவே குறித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளான பெண்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் பணம் செலுத்திய பின் பாதுகாப்பு இல்லை என உயர்ந்துள்ளனர். இதனால் தாங்கள் பயணத்தை இரத்து செய்வதாக கோரி பணத்தை கேட்பதற்கு அதை குறித்த நபர்கள் மறுத்துள்ளனர்.
மேலும், குறித்த வெளிநாட்டு பெண், “நாங்கள் இருவர் மாத்திரம் மட்டுமே அந்த படகு சவாரியில் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் அனைவரும் ஆண்கள். நாங்கள் இந்த படகு சவாரி எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதுகின்றோம்“
ஆகவே, ரசீதை பெற்றுக்கொண்டு பணத்தை எங்களுக்கு திருப்பி தாருங்கள்“ எனவும் கூறியுள்ளார்.
அந்த படகில் கடமையாற்றும் ஊழியர்களை பார்த்து அச்சப்பட்ட இரு பெண்களுக்கு செலுத்திய 25,000 ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த ஊழியர்கள் தொடர்பாக தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் சுற்றலா பயணிகள் இலங்கையர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் இல்லாமல் செய்வதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது.
குறித்த காணொளியை கீழே காணலாம்…