முல்லைதீவு – குருந்தூர் மலைப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில வருகை தருவதை முன்னிட்டு தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பினை வலியுறுத்தியும் நீதிமன்ற வழக்கினை நடைமுறைப்படுத்த கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குருந்தூர் மலைப்பகுதியில் இன்றைய தினம் (21.06.2023) காலை கூடிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.