ஈழத்தமிழரை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் செயல்பாட்டினை சில போட்டிகளை நடத்தும் தென்னிந்திய தொலைக்காட்சிகள் தொடர்ந்து அரங்கேற்றி கொண்டிருக்கின்றன.
பொதுவாக போட்டி நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கப்படும். ஆனால் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சிகளில் அண்மைகாலமாக புலம்பெயர் ஈழத்தமிழர்களை உள்ளீர்க்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.
டி.ஆர்.பி ரேட்டிங்
காரணம் அவர்களது டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக புலம் பெயர்தமிழர்களை தமது போட்டி நிகழ்ச்சிகளில் இணைத்து கொள்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை இணைத்து கொள்வதால் அவர்களது நிகழ்சிகள் பிரபல்யம் அடைகின்றது என்பதுதான் உண்மை.
ஈழ தமிழர்களை உள்ளீர்க்கும் தென்னிந்திய தொலைகாட்சிகள் முதலில் வெற்றியாளரை தீர்மானித்துவிட்டு போட்டியை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அந்த தொலைக்காட்சிகளில் ஒன்று ஈழத் தமிழரை கறிவேப்பிலையாக அதாவது பைனல்வரை அனுமதித்துவிட்டு இறுதியாக பரிசு வழங்காமல் தவிர்ப்பார்கள்.
இன்னொரு தொலைகாட்சியோ அதற்கும் ஒருபடி மேலே சென்று ஈழத் தமிழரை ரேட்டிங்கிற்காக பயன்படுத்திவிட்டு பைனல் வாய்ப்பே வழங்காமல் தவிர்த்துள்ளார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் தங்கிருந்த நிலையில் போட்டிகளில் பங்கேற்றிருந்த புலம்பெயர் போட்டியாளருக்கு மட்டுமல்லாது இது புலம்பெயர் வாழ் ஈழ தமிழர்கள் மத்தியிலும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
ஆக மொத்தத்தில் தமிழர் நடத்தாத தொலைக்கட்சியில் தமிழர் நடுவராக இல்லாத மேடையில் ஈழத் தமிழர் திறமைக்கு பரிசும் மதிப்பும் கிடைக்கும் என எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமே என பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.