தமிழ் மக்கள் வாழும் பிரதான வீதியின் பெயர் மாற்றப்படுகிறதா? அமைச்சர் டக்ளஸ் அதிரடி

0
291

கொழும்பில் உள்ள கொம்பனித் தெருவின் பெயர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ‘கொம்பன்ன வீதி’ (Slave Island) என்று மாற்றப்பட்டாலும் அது தமிழில் கொம்பனித் தெரு என்றே இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (22-05-2023) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அவர்கள் நீண்டகாலம் பாவனையில் வைத்திருந்த பெயரை அதிகாரிகள் நினைத்தபடி மாற்றுவது தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

கொம்பனித் தெரு என்ற பெயரை மாற்றக் கூடாதென்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டாரென அறியமுடிந்தது.

இதேபோல விசேட அதிரடிப்படை உட்பட்ட அரச பாதுகாப்புத்துறை ஆட்சேர்ப்பில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாக மேலும் தெரியவந்துள்ளது.