சர்வதேச பொறிமுறையை கோரும் சுமந்திரன் எம்.பி

0
242

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (TRC) சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மிக மோசமான படுகொலைகள் 

2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில்தான் மிக மோசமான படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச பொறிமுறையை கோரும் சுமந்திரம் எம்.பி | Sumantram Mp Demanding International Mechanism

இன்றைக்கும் சர்வதேச நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு நாங்கள் சர்வதேசம் செல்லத் தயாரில்லை எனவும் உள்நாட்டு பொறிமுறைக்கமைய விடைகொடுப்போம் எனவும் கூறி வரும் அரசாங்கம் இன்னும் ஒரு விடையையும் கொடுக்காமல் உள்ளது.

ஆனால், இழப்பீட்டுக்காக வெளிநாட்டு நீதிமன்றத்துக்குச் செல்கின்றது. இது ஆட்சியாளர்களின் இனவாத முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றதாகவும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.

மேலும் ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேற்குறித்த விடயம் தொடர்பில் எடுத்துரைக்க உள்ளதாகவும் கூறினார்.