ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது வேதனைக்குரியது எனக்கூறிய எலோன் மஸ்க் நிறுவனத்தை விற்கப்போவதாக கூறியுள்ளார்.
ட்விட்டரை கையாள்வது கடினம்
உலக பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க்(elon musk) கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.
ட்விட்டரில் கடந்த சில மாதங்களாக பல மாற்றங்களை செய்து வரும் எலோன் மஸ்க் சரிபார்க்கப்பட்ட புளூ டிக் திட்டம், ட்விட்டரின் லோகைவை மாற்றியது போன்ற பல புதுமைகளை செய்தார்.
சரியான வருமானம் இல்லாததால் அவரது ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. இதனிடையே எலோன் மஸ்க் சில தினங்களுக்கு முன் பிபிசி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதிக மன அழுத்தம்
”ட்விட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அதனை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போன்று உள்ளது. ட்விட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று கருதினாலும், கடந்த பல மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன்.”
”பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன். 8000 பேர் பணிபுரிந்த எங்கள் அலுவலகத்தில் தற்போது 1500 பேர் தான் பணிபுரிகிறார்கள். சரியான நபரைக் கண்டுபிடித்தால் அவரிடம் ட்விட்டர் நிறுவனத்தை விற்பேன்.” என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியன் டொலருக்கு குறைவாக விற்க மாட்டார் எனத் தெரிய வந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலை microblogging தளத்தில் வெளியிடுவார் என தெரிகிறது.