தனது 12ம் வயதில் திருமணம் செய்து 13ம் வயதில் கர்ப்பம் தரித்து தொடர்ந்து 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
யார் அந்த பெண்?
ஆபிரிக்கா நாட்டில் உகண்டா நகரத்தை சேர்ந்தவர் தான் மரியம் நபடான்சி. இவர் தனது இளம் வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று வந்துள்ளார். முதலில் இவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்பர் ஓவுலேட் என்ற நிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து குழந்தை பெற்றெடுத்த மரியத்திற்கு தற்போது 40 வயது ஆவதோடு 44 குழந்தையும் பெற்றுள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
44 குழந்தைகள்
இதில் 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 5 முறையும், ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது. மேலும் ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
44 குழந்தைகளை பெற்றெடுத்தாலும் அதற்கு இடையில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது இவருக்கு 20 ஆண்மகன்களும் 18 பெண்மகள்களும் காணப்படுகின்றன.
மரியத்தின் சொத்துக்களை பறித்துக் கொண்டு அவரது கணவர் சென்று விட்டார். ஆகவே குழந்தையை வளர்ப்பதில் மரியம் சிரமம்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.