உலகின் பல இடங்களில் பேய் பிசாசுகள் வசிப்பதாக கூறப்படுகின்றன. அதில் சில இடங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால் அரசாங்கங்கள் கூட அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன.
அந்த வகையில் கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகளைக் காணக்கூடிய ஒரு இடம் உலகில் உள்ளது. இங்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு விதித்துள்ள தடை
இத்தாலியின் போவெக்லியா (Poveglia) தீவு பற்றி கூறுகையில் இங்கு செல்பவர்க்கு மரணம் நிச்சயம் என்றும் இங்கு செல்பவர்கள் திரும்பி வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அத்தோடு இந்தத் தீவுக்குச் செல்ல யாருக்கும் தைரியம் வருவது இல்லை. சென்றவர்களில் சிலர் திரும்பி வரமுடியவில்லை. அல்லது வந்தவர்கள் இந்த தீவு இப்போது சபிக்கப்பட்டுவிட்டது போகவே கூடாது நான் தப்பி வந்ததே பெரிய விஷயம் என்ற ரீதியில் கூறுகின்றனர்.
இங்கு விசித்திரமான குரல்கள் ஒலிப்பதாக மக்கள் கூறுகின்றனர். இங்கு செல்லும் மக்களுக்கு இத்தாலி அரசும் உத்தரவாதம் அளிப்பதில்லை. அங்கு போவதை தவிர்க்க வேண்டும் என்று தான் அறிவுறுத்துகிறது.
எங்கு பார்த்தாலும் மனித எச்சங்கள்
இத்தாலியின் வெனிஸ் நகருக்கும் லிடோவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்தத் தீவு வெனிஸ் விரிகுடா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவு சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.
இங்குள்ள நிலத்தின் பாதி பகுதி மனித எச்சங்களால் ஆனது என்று கூறப்படுகிறது. இத்தாலியில் பிளேக் நோய் பரவியபோது அந்நாட்டு அரசு பாதிக்கப்பட்ட1 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் இந்தத் தீவுக்குக் கொண்டு வந்து அவர்களை உயிருடன் தீ வைத்து எரித்தாக அதன் வரலாறு கூறுகிறது. இது தவிர கருப்பு காய்ச்சல் நோயால் இறந்தவர்களும் இந்த தீவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தீவில் இருந்து வரும் விசித்திரமான ஒலிகள்
மர்மமான இந்த தீவில் ஒரு மருத்துவமனையும் இருந்தது. ஆனால் அதுவும் விரைவில் மூடப்பட்டது. இதற்குப் பிறகு 1960 ஆம் ஆண்டில் ஒரு பணக்காரர் இந்த தீவை வாங்கினார்.
ஆனால் அவரது குடும்பத்தினர் சில விபத்துகள் ஏற்பட்டு இறந்து விட்டனர். அவரும் தற்கொலை செய்து கொண்டார். அப்போதிருந்து இந்த தீவு சபிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.