பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
முதல் சீசன் முதல் இன்று வரை சென்றுக் கொண்டிருக்கும் சீசன் 6 வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்குகளின் படி குறைவான வாக்குகளைப் பெற்றவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அவ்வாறு 21 போட்டியாளர்கள் உள்ளே சென்று இறுதியில் 4 போட்டியாளர்களில் ஒருவர் மாத்திரம் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
அவ்வாறு இந்த பிக்பாஸ் 6 வெற்றியாளராக அசீம் வாகை சூடிக் கொண்டார். இந்த பிக்பாஸ் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி முடிவடைந்தது.
பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்
பிக்பாஸ் சீசன் 6 முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 தமிழில் வருகிற நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என நம்பபடுகிறது.
இந்நிலையில், மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது மார்ச் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இதனை மோகன்லால் தொகுத்து வழங்க இருக்கிறார்.
மலையாளத்தில் பிக்பாஸ் 4 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமாக தயாராகியுள்ளது.
இதில் எந்தெந்த மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துக் கொள்ளப்போகிறார்கள் என்பதை 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும், இதனை ஆரம்பிக்கும் நிகழ்வாக இந்த சீசனின் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.