கடலில் சாய்ந்த பிரம்மாண்ட கப்பல்; பயணிகள் நிலை

0
287

கரையில் நின்ற கப்பல் பலத்த காற்று வீசியதில் கடலில் சரிந்தது.

சரிந்த கப்பல்

ஸ்காட்லாந்து, எடின்பர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் கப்பல் நிறுத்தம் அமைந்துள்ளது. அங்கு பெட்ரல் என்ற ஆராய்ச்சி கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் பயணிகள் சிலர் இருந்தனர்.

இந்நிலையில், கடுமையான காற்று வீசியதில் கப்பல் திடீரென சரிந்துள்ளது. இதனால் பதறிய பயணிகள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 25 பேர் காயமடைந்துள்ளனர்.

பலத்த காற்று

அதில் 15 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், 10 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 ஆம்புலன்சுகள், ஒரு வான்வழி ஆம்புலன்சு, 3 சிகிச்சை குழுக்கள்,

கடலில் சாய்ந்த பிரம்மாண்ட கப்பல்; பயணிகள் நிலை - பரபரப்பு! | Ship Suddenly Toppled Over Shore Britain

ஒரு சிறப்பு அதிரடி படை, 3 துணை மருத்துவ பணி குழுக்கள் மற்றும் நோயாளிகளை சுமந்து செல்லும் வாகனம் ஒன்று ஆகியவை சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.