இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சர்வதேச கால்பந்திலிருந்து (FIFA) இடைநிறுத்துவதற்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73 ஆவது உலக கால்பந்து நிர்வாகக் குழுவின் உயர்மட்ட நிர்வாகிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் நேற்றைய தினம் (16.03.2023) நுவன்டாவின் தலைநகர் கிகாலியில் சந்தித்துள்ளனர்.
இதன்போது 211 சங்கங்களில், 199 உறுப்பினர் சங்கங்கள் சிம்பாப்வேயை இடைநிறுத்துவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இலங்கை கால்பந்து
197 நாடுகள் தேர்தல்களின் போது வாக்களிப்பதிலிருந்து இலங்கையைக் கட்டுப்படுத்தும் பிரேரணைக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தை உலக கால்பந்து சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ள நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.