தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துகொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.
இலங்கைப் பெண் லாஸ்லியாவை போல இலங்கையை சேர்ந்த போட்டியாளரான இவர் அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்த ஜனனி, பின்னர் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற துவங்கினார்.
பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களுக்கு மேல் நிலைத்து விளையாடிய ஜனனி பின்னர் வெளியேற்றப்பட்டார். தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் நடிகர் விஜயை வைத்து இயக்கும் லியோ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் வெள்ளை நிற சேலையில் போட்டோசூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.