ரத்த காயங்களுடன் சமந்தா; ரசிகர்கள் அதிர்ச்சி

0
549

படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஃபோட்டோவை சமந்தா பகிர்ந்துள்ளார்.

சமந்தா 

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் சிகிச்சையில் இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார்.

ரத்த காயங்களுடன் சமந்தா; பரவும் ஃபோட்டோ - ரசிகர்கள் அதிர்ச்சி | Shocking Photo Posted By Samantha

ரத்த காயம்

தற்போது, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ரத்த காயங்களுடன் சமந்தா; பரவும் ஃபோட்டோ - ரசிகர்கள் அதிர்ச்சி | Shocking Photo Posted By Samantha

கையில் காயங்களுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் வேகமாய் பரவி வருகிறது.