இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியின் போது நடனமாடிய 19 வயது இளைஞர் உயிரிழந்தார்.
வீடியோ வைரல்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர் நடனமாடிக்கொண்டிருக்கும் போதே திடீரென தரையில் விழுந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது, பின்னர் இது சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.
நொடியில் போன உயிர்
45 நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், கருப்பு கால்சட்டை மற்றும் வெள்ளை சட்டை அணிந்த இளைஞர் பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடுவதைக் காணலாம். அவர் நன்றாக ஆடுவதை அவரது நண்பர்கள் உற்சாகமாக ரசித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், அவர் திடீரென அசையாமல் நின்று தலை குனிகிறார், சில வினாடிகளுக்குப் பிறகு, முன்புறமாக பொத்தென தரையில் விழுந்தார். சுற்றியிருக்கும் நண்பர்கள் இது நடனத்தின் ஒரு அங்கம் என்று நினைத்து அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த அவர் சுயநினைவின்றி அப்படியே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர் உடனைடியாக பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததால், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சின் நாட்களுக்கு முன், இதேபோன்ற ஒரு சம்பவத்தில், 40 வயதான முகமது ரப்பானி திருமண நிகழ்ச்சியின் போது மணமகனுக்கு மஞ்சள் பூசும்போது திடீரென விழுந்து இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதற்கு சரி முன்பு ரப்பானி சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியானது.