கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து. வசந்த், எஸ்ஜே சூர்யா போன்ற பலரிடம் அவர் அசிஸ்டன்ட் ஆக இருந்து அதன் பின் தான் இயக்குனர் ஆனார்.
தற்போது குணச்சித்திர நடிகராகவும் அவர் வலம் வருகிறார். சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்து வரும் நிலையில், அவரது ரோலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் ட்விட்டரில் 18+ புகைப்படம் வெளியிடும் கணக்கில் இளம்பெண் போட்டோவுக்கு நடிகர் மாரிமுத்து அவரது போன் நம்பரை கமெண்ட் செய்து கால் செய்ய சொல்லி இருக்கிறார் என screenshot உடன் சர்ச்சை வெடித்தது.
அந்த நம்பர் உண்மையில் மாரிமுத்துவின் நம்பர் தான் என்பதால் நெட்டிசன்கள் அதிகம் விமர்சிக்க தொடங்கினார்கள்.
மகன் விளக்கம்
இந்நிலையில் மாரிமுத்துவின் மகன் இந்த சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். கமெண்ட் செய்தது உண்மையில் அப்பாவின் கணக்கு அல்ல, அவரது போன் நம்பர் பலருக்கும் தெரியும். அதை யாரோ இப்படி தவறாக போலி கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்கள் என அவர் கூறி இருக்கிறார்.