ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களை காண தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார்.
வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு கிம் ஜோங் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி பிரபலமான திரைப்படங்களை பார்வையிடுவோரின் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது.
முன்னர் இதுபோன்ற குற்றங்களுக்கு கைதாகும் பெற்றோர்கள் எச்சரித்து விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று ஹாலிவுட் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உடனடி தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.
மட்டுமின்றி வெளிநாட்டு திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக வடகொரியாவுக்கு எடுத்துவரும் நபர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சட்டத்திற்கு உட்பட்டு வளர்க்க வேண்டும் எனவும் வடகொரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹாலிவுட் அல்லது தென் கொரிய திரைப்படத்தைப் பார்க்கும் ஒரு மகன் அல்லது மகளின் பெற்றோர்கள் கட்டாய உழைப்பு முகாமில் ஆறு மாதங்கள் கழிப்பார்கள் என கிம் ஜோங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, அவர்களின் பிள்ளைகள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.