ஜாம்பிக்கள் போல சாலைகளில் அலையும் மக்கள்; அமெரிக்காவில் அதிர்ச்சி!

0
276

அமெரிக்காவில் புதிதாக tranq அல்லது Xylazine எனும் போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளதாகவும் இந்த போதைப் பொருளை பயன்படுத்தும் மக்கள் ஜாம்பி போல நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Xylazine அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட மருந்து என கூறப்படுகின்றது. இதனை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெட்னரி மருத்துவமனைகளில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனை வைத்து தற்போது போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவர்கள் எச்சரிக்கை

அதேவேளை Xylazine மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் இதனை ஓவர் டோஸ் எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜாம்பிக்கள் போல சாலைகளில் திரியும் மக்கள்;அமெரிக்காவில் அதிர்ச்சி! | People Wandering On The Roads Like Zombies

Zombie Drugஐ பயன்படுத்தினால் தூக்கமே வராது என்பதுடன் தீவிர மன அழுத்தம், கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படும் எனவும் அதனை கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுமாம்.

ஜாம்பிக்கள் போல சாலைகளில் திரியும் மக்கள்;அமெரிக்காவில் அதிர்ச்சி! | People Wandering On The Roads Like Zombies

அதேவேளை கடந்த 2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதால் 2,668 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

tranq-ஐ பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால் அதனை பயன்படுத்துபவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்றும் அவர்களுக்கு எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம்.

இந்நிலையில் ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.