தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ். இவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்த பிறகும் தற்போது நான்காவது திருமணமாக நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்ய போகிறேன் என்று அவரை லிப்லாக் அடித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தவர்.
இந்த செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலரும் பல வித கருத்துக்கள் தெரிவித்தனர்.
மூன்றாவது மனைவி
இந்நிலையில் இவரின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி இதை குறித்து பேசியுள்ளார். அதில் அவர்,” என்னை இன்னும் அவர் விவாகரத்து செய்யவில்லை. அதனால் அவர் நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்.
ஏற்கனவே திருமணம் நடந்தும். அதுவும் மூன்று பெண்களுடன் நடந்தும், தற்போது நான்காவது திருமணத்தை பற்றி எவ்வாறு யோசிக்க முடியும்.
மேலும் இவர் திருமணம் செய்து மூன்று பேருக்கும் ஒவ்வொரு குழந்தை இருகிறது. இந்நிலையிலும் எப்படி இவர் இப்படி கீழ்த்தனமாக நடந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளார்.