சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; அச்சத்தில் உலகநாடுகள்!

0
382

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் உள்ளன.

இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டுக்குள் நுழைய மொராக்கோ அரசாங்கம் தடை விதித்துள்ளது. சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது.

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா; அச்சத்தில் உலகநாடுகள்! | Corona Speeding Up In China World In Fear

 கட்டாய கொரோனா பரிசோதனை

இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில் வட ஆபிரிக்க நாடான மொராக்கோ சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

இதனிடையே வருகிற 5 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை அவுஸ்திரேலியா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

அதேபோல் கனடாவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடர்பான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அங்கு இந்த கட்டுப்பாடு வருகிற 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கனடா அறிவித்துள்ளது.