2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பின்வரும் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதன்படி, இலங்கை அணித்தலைவராக தசுன் சானக்கவும், துணை தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை குழாம் கீழே…
முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதனிடையே, பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகவீனமுற்றுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண குணமடைந்த பின்னர் அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
