அரச விடுமுறைகள் அதிகம் வழங்கிய நாடுகளில் இலங்கைக்கு 4 ஆம் இடம்..

0
364

உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் உள்ளத்தக்க தெரிவிக்கப்ட்டுள்ளது.

190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன் அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

5 முதல் 8 நாட்கள் தொடர்ச்சியாகவும் அங்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ள நேபாளம் இரண்டாம் இடத்திலும், 26 அரச விடுமுறைகள் வழங்கப்பட்ட ஈரான் 3 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை இந்த பட்டியலில் 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தவருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மலேசியா, பங்களாதேஸ், எகிப்து, கம்போடியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.