பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் சில்லிடவைக்கும் சில கணிப்புகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு
பிரபல பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் 467 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்காலம் தொடர்பிலான தமது கணிப்புகளை கவிதைகளாக பதிவு செய்துள்ளார். இதில் பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன.
3797ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகளை அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிறக்கவிருக்கும் 2023 புத்தாண்டு தொடர்பில் அவர் பதிவு செய்துள்ள கணிப்புகள் தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அதில், உணவு விலை அதிகரித்து, மக்களால் ஒருவேளை உணவுக்கும் சிரமம் ஏற்படும் நாளில், மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொள்வார்கள் எனவும், அது மனிதன் மனிதனை உண்ணும் நிலையாக இருக்கலாம் எனவும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
அடுத்ததாக, 7 மாதங்கள் நீளும் கடுமையான போர் மூளும் எனவும், அதன் பின்னர் உலகையே உலுக்கும் பல சம்பவங்கள் அரங்கேறும் எனவும், மக்கள் கொத்தாக மடிவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அவதிப்படுவார்கள்
ஆனால், இது உக்ரைன் போருக்கு பின்னர் நடந்தேறும் சம்பவமாக இருக்கலாம் அல்லது போர் குற்றங்களாக இருக்கலாம் எனவும் ஒருசாரார் கருதுகின்றனர். இன்னொன்று, பூமியின் ஒருபக்கம் வறட்சி தாண்டவமாடும்போது இன்னொருபக்கம் பெருவெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவார்கள் எனவும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
மேலும், 2023ல் உள்நாட்டு கலவரங்கள் அதிகமாக மூளும் எனவும் சமூகத்தில் மக்களிடையே குழப்பமான நிலை அதிகரிக்கும் எனவும் முதன்மையான ஒப்பந்தம் ஒன்று மீறப்படும் எனவும் நோஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஈரானில் தற்போதும் மக்கள் போராட்டம் நீடித்து வருவதுடன் கைதானவர்களில் 400 பேர்களுக்கு மேல் தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.