பிரான்ஸில் ஏலம் விடப்படவிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டதால் ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
பிரான்ஸில் கிறிஸ்டிஸ் டாட் காம் என்ற இணையதளத்தில் நடராஜர் சிலை ஏலம் விடப்படுவதாக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த சிலை, கடந்த 1972ம் ஆண்டு தமிழகத்தின் கோவில்பட்டியில் உள்ள கோதண்ட ராமேஸ்வர் கோயிலில் திருடப்பட்ட சிலை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஏல மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஏலம் நிறுத்தப்பட்டதுடன் நடராஜர் சிலையை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.