மதுபான சாலைகளில் அதிகமானவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை!!

0
708

இலங்கையில் உள்ள மதுபான சாலைகளில் அதிகமானவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகின்றது.

அத்தோடு இதனாலதான் முறையாக வரி அறவிடப்படுவதில்லை என்றும் ஜே.வி.பி. உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

“முறையாக வரி அறவிட்டால் அந்த வரியே போதும். மக்கள் மீது இப்போது சுமத்தப்பட்டிருப்பது போல் அநியாயமாக வரி சுமத்த வேண்டிய தேவை ஏற்படாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்குக்கூட மதுபானசாலைகள் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.