“மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தமைதான் தான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனமான செயல்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் சந்திரிகா அம்மையாரைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனமான செயல்
“மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நான் நடவடிக்கை எடுத்தமைதான் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனமான செயல்.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கி வருகின்றார். எனினும், அவருக்கு நான் உரிய நேரத்தில் தக்க பதிலடியை வழங்குவேன்” என்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.