யாழ் பல்கலைக்கழகத்திலும் வல்வெட்டித்துறையிலும் விமர்சையாக கொண்டாடப்பட்ட தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள்!

0
502

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் | Prabakaran Birthday Celebration In University
யாழ். பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் | Prabakaran Birthday Celebration In University

அதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது பிறந்த நாள் நிகழ்வு அவரது பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று(26) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் சிறப்பிக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு இனிப்பு,எள்ளுருண்டைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வெடியும் கொளுத்தப்பட்டது.