யாழ்.சிறுவர் பராமரிப்பு நிலைய சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய 36 வயது நபர்!

0
330

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் இன்று இரவு கைது செய்யப்பட்டார்.

இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் 12 வயது சிறுவனுக்கு 36 வயது நபரால் நேர்ந்த கொடூரம்! | Man Abuse Assaulted A 12 Year Old Boy In Jaffna

விசாரணைகளின் பின் சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.