காதலுக்கு இடையில் வயது என்பது வெறும் எண்களே என நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தானில் 19 வயது இளம் பெண் 70 வயதுடைய முதியவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
வயதை கடந்த காதல்
பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த 19 வயதான ஷுமைலா என்ற இளம் பெண் 70 வயதுடைய லியாகத் என்ற முதியவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சியின் போது ஷுமைலா, முதியவர் லியாகத் இருவரும் சந்தித்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒரு நாள் லியாகத் அதிகாலை நடைப்பயிற்சியின் போது ஷுமைலா பின்னால் சென்று கொண்டே பாடலை கிசுகிசுத்ததன் மூலம் இருவருக்குமான காதல் மலர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பு
இருவருக்கும் இடையிலான காதல் தொடர்பாக யூடியூபர் சையத் பாசித் அலி எடுத்த நேர்காணலில் ஷுமைலா தெரிவித்த கருத்தில், காதல் வயதினை பார்ப்பது இல்லை, அது அப்படியே நடந்து விடுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய பெற்றோர்கள் இதனை கடுமையாக எதிர்த்ததாகவும், ஆனால் தங்களுக்கிடையே உள்ள காதலை எடுத்து சொல்லி எனது வீட்டார்களை சம்மதிக்க வைத்தாக தெரிவித்துள்ளார்.
லியாகத் பேசிய போது, தனக்கு 70 வயதாகியும் நான் மனதளவில் இளமையாக இருப்பதாகவும், காதல் என்று வந்துவிட்டால் வயது விஷயமல்ல என தெரிவித்துள்ளார்.
மனைவி ஷுமைலாவின் சமையலில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தற்போது உணவகங்களில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.