நைட் கிளப்பிற்கு சென்ற ஆசிரியையைக்கு மதுபானம் அருந்தச் செய்து துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக கருவாகாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாலபே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் இளம் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையை சேர்ந்த இளம் ஆசிரியருடன் சமீபத்தில் இரவு விடுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது “நான் எங்களது ஆசிரியர் ஒருவருடன் வெளியே செல்கிறேன் என்று தனது காதலனிடம் தெரிவித்து விட்டு வெளியேறியுள்ளார்.
தனது பாடசாலை ஆசிரியருடன் கல்கிஸ்ஸ பிரதேசத்திலுள்ள நைட் கிளப் ஒன்றுக்கு சென்று நன்றாக மது அருந்திய பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது இரவு 12.00 மணி கடந்துவிட்டது.
ஆசிரியை துஸ்பிரயோகம்
எனினும் திருப்தியடையாத இருவரும் கருவாக்காடு பிரதேசத்திலுள்ள நைட் கிளப்புக்கு சென்று அங்கும் மதுபானம் அருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் கொல்லுப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆசிரியை தம்மைப் போதைக்குள்ளாக்கி துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி இருப்பதாக அறிந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆசிரியை இது குறித்து கருவாக்காடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்படி நீதவான் நந்தன அமரசிங்க, கருவாக்காட்டு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.