நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு நேரத்தை காட்டும் நுவரெலியா மணிக்கூட்டுக் கோபுரம்!

0
534

நுவரெலியா பிரதான நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூட்டு கோபுரம் நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு நேரத்தை காட்டுவதால் , நகருக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நிர்மாணம்

நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டு கழகத்தின் பூரண ஆதரவுடன் மணிக்கூட்டுக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு அதன் பராமரிப்பு நுவரெலியா மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மணிக்கூட்டு கோபுரம் நிறுவப்பட்டதிலிருந்து அவ்வப்போது தொழில்நுட்ப பிழைகள் ஏற்பட்டு வருவதாகவும், மணிக்கூட்டுக் கோபுரத்தின் நான்கு பக்கங்களிலும் நேரங்கள் சரியாக பதியப்படாவிட்டாலும், மணி ஒலிக்கிறது.

மக்களை குழப்பும் நுவரெலியா மணிக்கூட்டுக் கோபுரம்! (Photos) | Nuwara Eliya Clock Tower That Confuses People

அந்தவகையில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் கடிகார கோபுரம் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேரத்தை நினைவூட்டுகிறது.

மக்களை குழப்பும் நுவரெலியா மணிக்கூட்டுக் கோபுரம்! (Photos) | Nuwara Eliya Clock Tower That Confuses People

இந்நிலையில் நகரின் மையப்பகுதியில் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு தூணின் நான்கு பக்கங்களிலும் நேரத்தை சரியான முறையில் காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    

Gallery
https://www.taatastransport.com/