கிளிநொச்சியில் கலவரம்; குவிக்கப்பட்ட இராணுவம்

0
318

கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் | Terrible Riot Kilinochchi Family Problem Army

இந்த சம்பவம் பிரம்மனந்தாறு – கண்ணகிநகர் கிராமத்தில் நேற்று (21-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு படையினர் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் | Terrible Riot Kilinochchi Family Problem Army

முன்னதாக கடந்த 19 ஆம் திகதி இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக தர்மபுரம் காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இந்த கலவரத்தின் தொடர்ச்சியே நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.