பெரும்பாலான பிரபலங்கள் பிரசவத்துக்குமுன் போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி வயிறு தெரியும் வகையில் காணப்படும் அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம்.
பிரித்தானிய மகாராணியாருக்கு நான்கு பிள்ளைகள். இன்றும் இணையத்தில் மகாராணியாரின் பல்வேறு படங்களைக் காண முடிந்தாலும் அவரது கர்ப்பகால புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியாது.
நான்கு குழந்தைகள் பெற்றும் அவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு புகைப்படம் கூட கிடைக்காதது ஏன்?
அதாவது, மகாராணியார் முதல் முறை கர்ப்பமானது 1948ஆம் ஆண்டு. அந்த காலகட்டத்தில் கர்ப்பமாக இருப்பதை வெளியே சொல்வதே விலக்கப்பட்ட விடயமாக கருதப்பட்டதாம். சொல்லப்போனால் மகாராணி கர்ப்பமுற்றிருக்கிறார் என்ற விடயமே அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லையாம்.
அப்படி கர்ப்பமாக இருப்பதையே மறைக்கவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்த நிலையில் யார் போட்டோஷூட் நடத்துவார்கள்? ஆக நான்கு முறை கர்ப்பமாக இருக்கும் போதும் மகாராணியாரை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை போலும்.
ஆகவேதான், அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பார்க்கமுடியவில்லை என கருதப்படுகிறது. அபூர்வமாக ஒன்று அல்லது இரண்டு படங்களில் சற்றே முன் தள்ளிய வயிறுடன் மகாராணியார் வாக்கிங் செல்லும் படங்கள் வேண்டுமானால் கிடைக்கலாமேயொழிய கர்ப்பகால போட்டோஷூட் நடத்தப்பட்டு அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடையாது.
அத்துடன், ராஜகுடும்பப் பெண்களுக்கு பிரசவமும் அரண்மனையில்தான். அந்தக் கட்டுப்பாட்டை உடைத்த முதல் பெண் இளவரசி டயானாதான். அவர்தான் முதன்முறையாக மருத்துவமனையில் இளவரசர் வில்லியமை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.