ரயில்கள் தடம்புரள காரணம் ; தொழிற்சங்கங்கள் தெரிவிக்கும் விடயம்

0
484

ரயில் மார்க்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையே கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கான சிறந்த தீர்வு கிடைக்காவிடின், எதிர்வரும் நாட்களில் பயணிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் K.A.U.கொந்தசிங்க குறிப்பிட்டார்.

ரயில்கள் தடம்புரள்வதற்கான காரணத்தை வெளியிட்ட தொழிற்சங்கங்கள்! | Reason For Derailment Of Trains

கொழும்பு பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று ரயில் எஞ்சினொன்று தடம்புரண்டது.

இதன்போது காங்கேசன் துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலொன்று, கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் தடம்புரண்டது.அதன் காரணமாக பல ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.