கோட்டாபய ராஜபக்ச 50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் எனவும் அவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் தேடிக்கொள்ள முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முடிந்தவரையில் தற்போது மக்களை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளோம். உரம், சமையல் எரிவாயு, எரிபொருள் என்பன மக்களுக்கு கிடைக்கின்றது.
ஆகவே எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை வழமைக்கு கொண்டு வந்து இந்த பயணத்தை முன்னெடுக்க முடியும். கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தாங்கள் மரிப்பதற்கு முன்பாவது அது குறித்து சிந்தித்து மனஸ்தாபப்படுவார்கள்.
அவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களால் தேடிக்கொள்ள முடியாது. 50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் தான் கோட்டாபய ராஜபக்ச. அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஒரு தீவிரவாத செயற்பாட்டையும் நாங்கள் காணவில்லை.
ஒன்றரை வருடத்தில் ஒரு போராட்டத்திற்கு கூட அவர் கண்ணீர் புகை பிரயோகிக்கவில்லை. தாக்குதல்களை நடாத்தவும் இல்லை. ஒரு உண்மையானவருக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு இடமளிக்கவில்லை என்றே நான் கூறுவேன்.
அவர் அரசியலில் இருந்து விலகினார். மீண்டும் அரசிலுக்கு வருவதற்கான யோசனையும் அவருக்கு இல்லை.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.