விலை குறையும் தின்பண்டங்கள்

0
534

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.

இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், சந்தையில் தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சூரியகுமார தெரிவித்துள்ளார்.

தின்பண்டங்களின் விலை  குறைவு | The Prices Of Snacks Are Lower By The Rate

பொருட்களின் விலை

மிட்டாய் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி தரம் கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் தாவர எண்ணெய்யின் விலை கிலோவிற்கு சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மலிவு விலையில் தின்பண்டங்களை வாங்குவதற்கு நுகர்வோர் பல வாரங்களாக அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை அடுத்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.