பிரித்தானிய ராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) மனைவி கேரி ஜோன்சன் (Carrie Johnson) தனது ஆடையைத் தேர்வு செய்தது குறித்து சர்ச்சையை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது 96வது வயதில் காலமான பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்குகள் நேற்று இடம்பெற்றிருந்தது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), பிரானஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), டென்மார்க் ராணி மற்றும் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள், பிரதமர்கள் மற்றும் பொதுப் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் அவரது மனைவி கேரி ஜோன்சன் (Carrie Johnson) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கேரி ஜோன்சன் (Carrie Johnson) அணிந்திருந்த ஆடை தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் இறுதிச் சடங்கிற்கு பொருத்தமற்ற ஆடையை அணிந்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கேரி ஜோன்சன் (Carrie Johnson) ஒரு சதுர வடிவிலான கழுத்து அமைப்பை கொண்ட இராணுவ பாணி பொத்தான் விவரங்களுடன் கூடிய கருப்பு ஆடையை அணிந்திருந்தார்.
இந்த ஆடை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பலரும் தற்போது சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
கேரி ஜான்சன் (Carrie Johnson) ஒரு பேஷன் நிகழ்வில் கலந்துகொண்டது போல் இருக்கிறார், அரசு இறுதிச் சடங்கில் இல்லை என பொது மக்கள் சமூக ஊடகங்களில் தமது கருத்து வெளிப்படுத்தி வருகின்றனர்.