திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
427

திருகோணமலையில் உள்ள பகுதி ஒன்றில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றையதினம் (19-09-2022) இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்! | One Person Died After Drowning In Trincomalee

இந்த சம்பவத்தில் திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயது பொன்னம்பலம் சுப்ரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்! | One Person Died After Drowning In Trincomalee

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனை பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.