அடுத்துவரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை ‘மேலவை இலங்கை கூட்டமைப்பு’பாகவே நாம் எதிர்கொள்வோம் என அக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலவை இலங்கை கூட்டமைப்பின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவன்ச இதனை கூறினார்.
எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை
அத்துடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு கோரினோம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. மொட்டு, யானை ஆட்சியே தொடர்கின்றது. அந்த ஆட்சியின்கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் உள்ளாட்சி சபைத் தேர்தல் மட்டுமல்ல அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் எமது கூட்டணி போட்டியிடும் என்றும் விமல் வீரவங்ச மேலும் கூறினார்.