கிளிநொச்சி கொலை சம்பவம்; சிக்கிய சந்தேக நபர்!

0
543

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 11 மாதங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை உலுக்கிய கொலை சம்பவம்;  சிக்கிய சந்தேக நபர்! | Kilinochchi Family Members Killed

குடும்பஸ்தர் படுகொலை

கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.

கிளிநொச்சியை உலுக்கிய கொலை சம்பவம்;  சிக்கிய சந்தேக நபர்! | Kilinochchi Family Members Killed

நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிளிநொச்சியை உலுக்கிய கொலை சம்பவம்;  சிக்கிய சந்தேக நபர்! | Kilinochchi Family Members Killed

இந்நிலையில் அந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சந்தேகநபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.