பிரித்தானிய அரசியார் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், 2 ஆம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது ரோயல் கடற்படையின் பீரங்கி வண்டியில் வைத்து மகாராணியின் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
மவுண்ட்பேட்டன் பிரபு இறுதிச் சடங்கு
142 மாலுமிகள் அதை இழுத்துச் சென்றனர். மறைந்த இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபு இறுதிச் சடங்குக்காக இந்த வண்டி கடைசியாக 1979 இல் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக ராணியின் தந்தை 6 ஆம் ஜோர்ஜ் மறைந்தபோது 1952 ஆம் ஆண்டு இந்த வண்டியைப் பார்க்க முடிந்தது.
இறுதி ஊர்வலத்தில் பீரங்கி வண்டிக்குப் பின்னால் புதிய மன்னர், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் சென்றார்கள்.
பைப் இசையும், டிரம் இசையும்
ஸ்கொட்டிஷ், ஐரிஷ் ரெஜிமெண்டுகளின் பைப் இசையும், டிரம் இசையும் சம்பிரதாயத்தின் முக்கிய நிகழ்வாக இசைக்கப்பட்டதுடன் ரோயல் விமானப்படை, கூர்க்கா படை ஆகியோரின் இசையும் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் மகாராணியின் இறுதிச் சடங்கு செப வழிபாடு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ஆரம்பமானது.
அதேசம்யம் மறைந்த மகாராணியின் வாழ்க்கையையும், சேவையையும் அரச குடும்பத்துடன் சேர்ந்து நினைவுகூர, உலகம் முழுவதிலும் இருந்து நாடுகளின் தலைவர்களும் அங்கு வந்துள்ளார்கள்.