முற்றிய தகராறு; துண்டாகிய விரல்

0
387

மொறட்டுவைவையில் அயலவர் இருவருக்கு இடையில் தகராறு முற்றியதில் ஒருவரின் கைவிரல் துண்டாகும் வரை கடித்ததாக கூறப்படும் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தகராறு முற்றியதில் விரலை துண்டாக்கிய நபர்! | A Person Who Broke His Finger In A Dispute

பாதிக்கப்பட்டவருக்கு சத்திர சிகிச்சை

பாதிக்கப்பட்டவருக்கு களுபோவில வைத்தியசாலையில் விரலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் தனது வீட்டில் வாகன திருத்தகம் ஒன்றை நடத்தி வருவம் நிலையில், அங்கு ஏற்படும் சத்தம் காரணமாக கைதானவர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தகராறு முற்றியதில் விரலை துண்டாக்கிய நபர்! | A Person Who Broke His Finger In A Dispute

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.