ஐ.நாவில் இந்தியாவின் ஆதரவை வென்றால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்!

0
662

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இந்தியாவின் ஆதரவை வெல்லும் பட்சத்தில் மேலும் 10 நாடுகள் இலங்கையின் பக்கம் சாயும் என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா (Pradeepa Mahanamahewa) தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தொடர்பான பிரேரணை ஒக்ரோ பர் 7 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும். 47 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கும்.

ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council

இதில் 23 அல்லது 24 நாடு களின் ஆதரவைத் திரட்டினால், பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்கக் கூடியதாக இருக்கும்.

இலங்கை வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஆதரவு மிக முக்கியம். இலங்கைக்கு சார்பாக இந்தியா வாக்களித்தால் மேற்குலகம், ஆபிரிக்கா, கரீபியன் தீவுகளில் உள்ள சுமார் 10 நாடுகள் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும்.

ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council

இந்தியா நடுநிலை வகித்தால், பிரேரணை நிறைவேறும். சிறிலங்கா உள்ளகப் பொறிமுறை யோசனையை முன்வைக்க வேண்டும் . 10 ஆண்டு கால மனித உரிமை திட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டும் – என்றார் .