டேட்டிங் முடித்து வீடு திரும்பிய காதலியிடம் செலவு செய்த பணத்தை திருப்பி கேட்ட காதலன்!

0
553

என்னுடன் உனக்கு`romantic connection’ இல்லையென்றால் உனக்கு நான் செலவழித்த பணத்தைத் திருப்பிக் கொடு என தன் டேட்டிங் தோழிக்குப் பில்லை அனுப்பிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது தொடர்பாக ‘கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது’ என்று தலைப்பிட்டு வெளியான வீடியோ பதிவில் ஃபியோனா (Fiona) என்ற பெண் “உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் நான் எனக்கு அறிமுகமான ஒரு ஆண் நண்பனைக் காணச் சென்றிருந்தேன். இதுதான் எனது முதல் டேட்டிங். அவரை சந்தித்து விட்டு வந்த பிறகு ‘மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களோடு எனக்கு romantic connection ஏற்படவே இல்லை’ என மெஸேஜ் செய்திருந்தேன்.

அதற்கு அவர் அளித்த பதில் தான் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

அந்த நபர் உடனே ‘unsuccessful date’ எனத் தலைப்பிட்டு அன்று எனக்குச் செய்த செலவுகள் பட்டியலை அனுப்பியிருந்தார். அதில் 17 பவுண்ட் உணவுக்காகவும், 12 பவுண்ட் குளிர்பானத்துக்காகவும் செலவழித்திருக்கிறேன். எனவே எனது நேரத்தை வீணடித்ததற்கு அந்த பணத்தை விரைவில் திருப்பித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

இந்த பதிலைப் பார்த்து என்னால் நம்பமுடியவில்லை. அன்று எங்கள் சந்திப்பின் போது நானே அவருக்கும் சேர்த்துச் செலவழிக்க முயன்றேன்.

டேட்டிங் முடிந்து வீடு திரும்பிய காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்! | The Boyfriend Shocked His Girlfriend Home Dating

பலமுறை பணம் கொடுக்க முயன்றேன். ஆனால் அவர் அதை மறுத்து அவரே கொடுத்தார். இப்போது அவரே திரும்பப் பணம் கேட்கிறார். இந்த 29 பவுண்ட் பணத்துக்கு நான் பிச்சை எடுக்கப் போவதில்லை. ஆனால் இதையும் இப்படிக் கேட்கிறார்களே என ஆச்சரியமாக இருக்கிறது.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவுக்குக் கீழே,”அப்படியானால் நேரத்தை வீணடிப்பதற்காக விலைப் பேசத் தொடங்கினால் எனது முன்னாள் காதலர்களுக்கு நான் அதிகம் பில் தரவேண்டியிருக்குமே.”எனவும் “அட இதுதான் நல்ல ட்விஸ்ட். புது ஹீரோ. புத்திசாலித்தனமான நியாயமானது” எனக் கலவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.