ஜனாதிபதி ரணிலின் கால் வாரப்படலாம்!

0
389

கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எந்த நேரத்திலும் கம்பளத்தை இழுக்க முடியும் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எந்த நேரத்திலும்  ஜனாதிபதி ரணிலின் கால்  வாரப்படலாம்! | President Ranil S Leg Can Be Injured At Any Time

கண்ணுக்கு தெரியாத கை

நாட்டில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஒரு கண்ணுக்கு தெரியாத கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இயங்குகிறது.

எந்த நேரத்திலும்  ஜனாதிபதி ரணிலின் கால்  வாரப்படலாம்! | President Ranil S Leg Can Be Injured At Any Time

எனினும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியை சிறு குழுவொன்று கைப்பற்றியுள்ளதால் கட்சி கூட்டங்களில் தாம் கலந்து கொள்வதில்லை எனவும் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.