சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக இலங்கை அமத்தியபா மகா சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் மற்றும் அவர்களில் கிட்டத்தட்ட 35,000 பேர் திருமணமான ஆண்கள் என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.
இதனால் 35,000 பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என்றும், சுமார் 700,000 குழந்தைகள் தந்தையை இழந்துள்ளனர் என்றும் மகாசபையின் தேசிய அமைப்பாளர் ரூபன் விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.