375,000 விவசாயிகளுக்கு இலவச யூரியா …

0
409
Farmer working in the field during winter season the field is located in Haryana, India.

ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோகிராம் யூரியா உர மூட்டை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உரத்தின் அளவை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவச யூரியா உரம் மற்றும் மும்மடங்கு சூப்பர் உரம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நேற்று விவசாய அமைச்சில் கைச்சாத்திட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கம்! | Free Fertilizer Package Provided To Farmers

அந்த ஒப்பந்தங்களின்படி இந்த பருவத்திற்கு தேவையான யூரியா உரம் மற்றும் மும்மடங்கு சூப்பர் உரம் வழங்குவதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ பதிலளித்திருந்தார்.