இந்தியாவில் தினமும் குழந்தைகளுடன் வகுப்பறைக்கு செல்லும் குரங்கு!

0
572

இந்தியாவிலுள்ள ஜார்க்கண்டில் உள்ள அரசு பாடசாலைக்கு புதிய வரவாக குரங்கு ஒன்று தினமும் குழந்தைகளுடன் வகுப்பறைக்கு சென்று அமர்ந்து கொள்கிறது.

கடந்த ஒரு வாரமாக பாடசாலைக்கு வரும் அந்த குரங்கு குறிப்பிட்ட அறையில் நடைபெறும் அனைத்து வகுப்புகளையும் விடாமல் கவனிக்கிறது.

இது தவிர காலையில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்திலும் பங்கெடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதன்போது காலை 9 மணிக்கு குழந்தைகள் பாடசாலைக்குள் நுழையும் சமயத்திற்கு வரும் இந்த குரங்கு மாலை பாடசாலை முடியும் நேரத்தில் தான் வெளியே செல்வதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை இந்த குரங்கு யாரையும் தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை என தெரியவந்துள்ளது. சில சமயம் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அவரது மேஜையில் அமர்ந்து கொள்ளுமாம்.

பின்னர் வகுப்புகள் தொடங்கியதும் அங்கு சென்று விடும் என குரங்கின் செயல்பாடுகளை பாடசாலையின் சேர்மன் சகால்தேவ் யாதவ் கூறியதோடு இந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் முயன்றும் முடியாமல் போய்விட்டது என தெரிவித்தார்.